×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது வெள்ளிக்கிழமை (மார்ச்.27) தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.28) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதாவது இன்று காலையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ. 1,10,160க்கு விற்பனை