×

காரைக்காலில் கொள்முதல் நிலையம் திறக்காததால் சாலையோரம் நெல்லை கொட்டி காவல்காக்கும் அவல நிலை

காரைக்கால். பிப்.18: காரைக்காலில் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் நடப்பாண்டில் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. புரெவி மற்றும் நிவர் புயல் மற்றும் அதனைத்தொடர்ந்து ெபய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் வயலில் சாய்ந்தும், முளைத்தும் வீணானது. எஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்து வரும் விவசாயிகள் மத்திய உணவுக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசுகள் கண்டுகொள்ளாததால் நெல்லை விற்க முடியாமல் சாலையோரங்களில் கொட்டி வைத்து இரவு பகலாக விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். மேலும் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்க மத்திய, மாநில அரசுகளை காரைக்கால் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Roadside paddy ,procurement station ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...