குளித்தலை நீலமேக பெருமாள் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நாளை நடக்கிறது

குளித்தலை, பிப். 18: குளித்தலை  கமல நாயகி சமேத நீலமேகப் பெருமாள் கோயிலில் நாளை(19ம்தேதி) ரதசப்தமியை முன்னிட்டு ஒரே நாளில் எம்பெருமான் ஏழு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.குளித்தலை நீலமேகப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு நாளை காலை 6. 15 மணிக்கு சூரிய ப்ரபை, 8 மணிக்கு ஹம்ச வாகனம், 10 மணிக்கு சேஷ வாகனம், 11மணிக்கு அனுமந்த வாகனம், மாலை 5 மணிக்கு கருட சேவை 7 மணிக்கு யானை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர ப்ரபை நிகழ்ச்சியில் கருட வாகன புறப்பாடு மட்டும் 8 வீதியில் நடைபெறும். மற்ற வாகனங்கள் தேர் வீதிகளில் புறப்பாடு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தக்கார் விஜய், செயல் அலுவலர் சங்கர் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

Related Stories:

>