×

ஓட்டு கேட்டு மறுபடியும் வருவீங்கள்ல… டோக்கனோட நாங்கலாம் 5 வருஷமா வெயிட்டிங்! அதிமுக வேட்பாளருக்கு ‘அமர்க்கள வரவேற்பு’

தமிழகத்தில் 2021ல் நடந்த பொதுத்தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நினைப்புடன் அதிமுக வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதற்காக அதிமுக தலைமை தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யும் பணியில் பலரும் ஈடுபட்டனர். இதன்படி தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம் பணம் வழங்கப்படும் என்று கூறி, சோழவந்தான் தொகுதியில் பொதுமக்களுக்கு அதிமுக தரப்பில் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இத்தொகுதியில் தற்போது அதிமுக தலைமை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மாணிக்கம் என்பவர்தான் கடந்த தேர்தலிலும் களத்தில் இருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார். இதனால் ஏற்கனவே அதிமுக வழங்கிய டோக்கன்கள், பணமாக மாறவில்லை என்கின்றனர் பொதுமக்கள் சிலர்.

இதனை உறுதிப்படுத்தும்விதமாக, அலங்காநல்லூர் அருகே வாவிட மருதூர் கிராமத்தில் பொதுமக்கள் சிலர் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் 20க்கும் மேற்பட்ட டோக்கன்கள் இருந்தன. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக தரப்பில் அவற்றை கொடுத்ததாக கூறிய அவர்கள், இந்த தேர்தலிலும் அதே நபர் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஏற்கனவே வழங்கிய டோக்கனுக்கு இதுவரை பணம் கொடுக்கவில்லை என்று கூறிய அவர்கள், டோக்கன் வழங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டினர். மேலும், இந்த ஆண்டும் முன்பு போலவே வெற்றிக்கு பிறகு பணம் என்று கூறி டோக்கன் கொடுப்பீர்களா?. அப்படி கொடுத்தால் நிச்சயம் எங்களுக்கு பணம் கிடைக்காது? எப்படியும் ஓட்டு கேட்டு வருவீங்கள்ல.. அப்ப பார்த்துக்கிறோம் என்றபடி கிளம்பிச் சென்றனர்.

Tags : 2021 general election ,Tamil Nadu ,Supreme ,
× RELATED பயன்பாட்டுக்கு வந்த திருத்தணி புதிய பேருந்து நிலையம்: பயணிகள் மகிழ்ச்சி