×

தென்னிலையில் அம்மா மினி கிளினிக் திறப்பு

க.பரமத்தி, பிப்.18: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் கீழ் 22 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை சுற்று பகுதி பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக, நீண்ட தூரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இலவச மருத்துவம் தேடி பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ் வசதியும் இல்லாத நிலையில் பொதுமக்கள் நோய் அவதிப்பட்டு வந்தனர். எனவே அம்மா மினி கிளினிக் வசதி வேண்டும் என ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று தென்னிலையில் அம்மா மினி கிளினிக்கிற்காக கட்டிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான திறப்பு விழா நடைபெற்றது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பால்வார்பட்டி சண்முகம் வரவேற்றார். ஒன்றிய அதிமுக செயலாளர்கள் வடக்கு செல்வக்குமார், தெற்கு செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மா மினிகிளினிக்கை க.பரமத்தி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளாரும் ஒன்றியக்குழு தலைவருமான மார்க்கண்டேயன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Mini Mini Clinic ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு