×

வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

பூந்தமல்லி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, அய்யப்பன்தாங்கல் வியாபாரிகள் நலச்சங்கத்தின் ஆண்டு விழா அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் டேவிட், பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் சகுபர் சாதிக் நிறுவன தலைவர் மூர்த்தி, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெயகரன், மாசிலாமணி, கருணாகரன், சத்திரிய பெருமாள், முருகேசன், சிங்காரவேலன், ரவிந்திரன், மோகன்லால், தங்கராஜ், கமால் பாஷா, பாண்டியன், ஜான்நிக்கோலஸ், எட்வர்ட், நீலமேகம், விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வணிகர்களின் பேரணி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

Tags : Merchants Association Annual Festival ,
× RELATED வியாபாரிகள் சங்க ஆண்டு விழா