வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

இளம்பிள்ளை, பிப்.18:  இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சி சார்பில், காடையாம்பட்டி வணிக வளாகத்தில் 5 கடைகளும், இடங்கணசாலை வணிக வளாகத்தில் 21 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் காடையாம்பட்டியில் உள்ள 2 கடைகள் மற்றும் இடங்கணசாலையில் உள்ள 3 கடைகளை ஏலம் எடுத்தவர், வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளார். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் வாடகையை கட்டும்படி பலமுறை அறிவுறுத்தியும், அவர்கள் வாடகையை செலுத்தவில்லை. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில், நேற்று பேரூராட்சி பணியாளர்கள், போலீஸ் புகாதுகாப்புடன் சென்று வாடகை செலுத்தாத 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்கள் ₹2 லட்சத்தை செலுத்தினர்.

Related Stories:

>