×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

சேந்தமங்கலம், பிப்.18:  புதுச்சத்திரம் ஒன்றிய அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், ஏழுர் ஊராட்சி அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் துகில் கண்ணன், தத்தாதிரிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் துரை ராமசாமி, வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி ஆகியோர் உடனிருந்தார்.

Tags : councilor ,AIADMK ,DMK ,MK Stalin ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...