புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், பிப்.18: புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய், புதன் அன்று மாட்டுச்  சந்தை கூடுவது வழக்கம். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்  இருந்தும் ஈரோடு, கோவை பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் வியாபாரிகள் வருவார்கள். இந்த 2  நாட்களில் கோடிக் கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய  சந்தையில், அதிக அளவிலான மாடுகள் விற்பனைக்கு  வந்திருந்ததால் விலை சரிந்தது. கறவை மாடு ₹44 ஆயிரத்துக்கும், இறைச்சி  மாடுகள் ₹19 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ₹11 ஆயிரத்துக்கும்  விற்பனையானது. மொத்தம் ₹1.75 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

Related Stories:

>