நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.18: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் மாவட்ட பொருலாளர் குமார் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினார். துணை செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யுவராஜ், செழியன் மொழிப்போர் தியாகி பரமானந்தம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், அம்பிகா பாண்டியன்,   ஒன்றிய செயலாளர்கள் கபிலர்மலை சண்முகம், மல்லை பழனிவேல், ஏ.பி.ஆர்.சண்முகம், தனராசு, எலச்சிபாளையம் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் தாண்டவன் கார்த்தி, ரவிச்சந்திரன், செல்வம், மணிமாரப்பன், திருமலை, கருணாநிதி, மகாமுனி, ராமலிங்கம், கார்த்திராஜ், ராமமூர்த்தி, மதுரா செந்தில், ஜிஜேந்திரன், கிரிசங்கர், ஆனந்த், பூங்கோதை செல்லதுரை, ரங்கசாமி, சரவணமுருகன், தனகரன், மீன்செல்வம், பழனிவேல், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருகிற மார்ச் 1ம் தேதி வரும் திமுக தலைவர் ஸ்டாலின்  பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, இருசக்கர வாகன பேரணி நடத்துவது. மார்ச் மாதத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>