திருச்செங்கோடு, பிப்.18: திருச்செங்கோடு வட்டார தோட்டக்கலைத் துறையில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், ரசாயன மருந்து பயன்படுத்தாமல் இயற்கை முறையில் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை
உற்பத்தி செய்ய மான்ய விலையில் கிட் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடங்கியுள்ள பொருட்கள்: 2 கிலோ அளவிலான வளர்ப்பு ஊடகம் தென்னை, நார்க்கழிவுடன் கூடிய வளர்ப்பு பைகள் 6 (12கிலோ கோகோபிட்) காய்கறி விதை பொட்டலங்கள், இயற்கை உரங்கள்- அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா டிரைக்கோடர்மா விரிடி, வேப்பஎண்ணெய் மற்றும் கையேடு. இத்தொகுப்பின் மொத்த விலை ₹850அதில் மானியம் ₹340போக மீதம் ₹510 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.