ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 7 நாள் கெடு

சூளகிரி, பிப்.18: சூளகிரியில் நெடுஞ்சாலை துறையினர் வழங்கி உள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: ஓசூர் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சூளகிரி-மாநில சாலையில், அமைக்கப்பட்டுள்ள கடைகள் கிமீ 62.130.63/230 வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை இன்று(18ம் தேதி) முதல் 7 நாட்களுக்குள் தாங்களே முன்வந்து, கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதற்குண்டான செலவுகள் வியாபாரிகளிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>