×

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி

 

பெங்களுரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி. சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்தது. கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் ஹென்ரிச் கிளாசென் 31 டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியில் ஜேக்கப் டஃபி 3, ரொமாரியோ ஷெப்பர்ட் 3, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 19வது சீசனில் முதல் போட்டி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான ஐதராபாத் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, பில் சால்ட், படிக்கல், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், ஆல்ரவுண்டர்கள் ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் உள்ளனர்

பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஐபிஎல் தொடரின் 19வது சீசன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் திருவிழாவில் மொத்தமுள்ள 10 அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடுகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 13 மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ரஜத் படிதார் தலைமையிலான ஐதராபாத் அணியில் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, பில் சால்ட், படிக்கல், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், ஆல்ரவுண்டர்கள் ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் உள்ளனர். ஹேசல்வுட் இல்லாத நிலையில் ஜேக்கப் டபி கலம் இறங்க வாய்ப்பு உள்ளது. டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மறுபுறம் சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல்பாதி ஆட்டங்களை தவறவிடும் நிலையில் இஷான் கிஷன் அணியை வழிநடத்த உள்ளார். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென்,, நிதிஷ்குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டன் என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் ஜெய்தேவ் உனத்கட், ஹர்சல் பட்டேல், அனிகேத் வர்மா, பிரைடன் கார்ஸ் இடம்பெறக்கூடும். பவுலிங்கை விட பேட்டிங் வரிசை தான் எதிரணியை மிரட்டும் வகையில் உள்ளது. இரு அணிகளும் புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் காண்கின்றன. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

வழக்கமாக ஐபிஎல் தொடரில் முதல் போட்டிக்கு முன் பிரமாண்ட தொடக்க விழா நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்டத்தில் 11பேர் பலியானதால் இந்த முறை தொடக்க விழா இல்லை. ஐபிஎல் வரலாற்றில் தொடக்க விழா இல்லாதது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் காரணமாக தொடக்க விழா ரத்துசெய்யப்பட்டிருந்தது.

இரு அணிகளும் இதற்கு முன் 25 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 13ல் சன்ரைசர்ஸ், 11ல் ஆர்சிபி வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு பைனலில் மோதிய இரு அணிகளும் இந்த சீசனில் முதல் போட்டியில் மோத உள்ளன. சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதிய 9 போட்டியில் ஆர்சிபி 5, சன்ரைசர்ஸ் 3ல் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3-2 என ஆர்சிபி முன்னிலையில் உள்ளது.

Tags : Royal Challengers Bangalore ,Sunrises Hyderabad ,Bangalore ,sunrises ,
× RELATED வேட்புமனு தாக்கல் செய்யும் போது,...