சாம்பல் புதன் தொடக்கம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிருஷ்ணகிரி, பிப்.18:  இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் நேற்று காலை தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.இதனை பங்குத்தந்தை இசையாஸ் முன்னின்று நடத்தினார்.இதில், அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து நெற்றியில் சாம்பலை வைத்துக் கொண்டு, தங்களுடைய தவக்காலத்தை துவங்கினர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் தவக்கால சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.

Related Stories:

>