×

பன்னிஅள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணம், பிப்.18: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பன்னிஅள்ளி ஊராட்சியில், குட்டப்பட்டி கூட்ரோட்டில் இருந்து பன்னிஅள்ளி புதூர் செல்லும் சாலை வரை ₹23.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பையூர் ரவி, கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் சுந்தரேசன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, நகர செயலாளர்கள் வாசுதேவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன், சண்முகம், சுந்தர், சாரதா கிருஷ்ணன், அம்பிகா சரவணன், அபிராமி மதனகோபால், ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...