×

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் கனிமொழி எம்பி தீவிர பிரசாரம்

பாலக்கோடு, பிப்.18: தர்மபுரி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 15ம் தேதி, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தர்மபுரி வந்தார்.நேற்று மூன்றாவது நாளாக பிரசாரம் செய்தார்.நேற்று இரவு பாலக்கோடு கரகூர் மற்றும் அமானி மல்லாபுரம் கிராமங்களில் நடந்த, தென்னை விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் மாரண்டஅள்ளி நான்கு ரோட்டில் நடந்த பிரசாரத்தில் பேசினார். கொலசனஅள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், ‘தூள் செட்டி ஏரிக்கு டெண்டர் விடாமலேயே, அதற்கு அடிக்கல் நாட்டியவர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சி அமைத்த 100நாட்களுக்குள், அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி தரப்படும் வன வாக்குறுதி அளித்தார்.பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியில் அண்ணா நெசவாளர் கூட்டுறவு  சங்கத்தில், கனிமொழி எம்பி நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். நெசவாளர்களின் பணிக்  கூடத்திற்குள் சென்று நேரில் பார்வையிட்டு, கோரிக்கை மனுக்களை  பெற்றுக்கொண்டார். அப்போது நெசவாளர்கள் கூறுகையில், ‘நெசவுத் தொழில் ஒன்றையே  நம்பியுள்ள எங்களுக்கு, முழு நேரமும் பணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் புளி தயாரிப்பு பணிகள்  ஏராளமாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்த தொழில் நசிந்து நஷ்டத்தில்  இயங்குவதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், மபுரி முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முருகன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மணி, சுடப்பட்டி சுப்பிரமணி, முன்னாள் பொருளாளர் தர்மசெல்வன், ராஜகுமாரி, மணிவண்ணன், பேரூர் கழக செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் கார்திகேயன், ஜெகநாதன்,  முத்து ராஜ், மாணவரணி மணிவண்ணன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராஜபார்ட், குமார், செழியன், இளைஞர் அணி ஹரிபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi ,campaign ,district ,Dharmapuri West ,
× RELATED திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்...