காரிமங்கலம் சந்தையில் ₹46லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், பிப்.18: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த சந்தையில், 425 மாடுகள், ₹34லட்சத்திற்கும், ஆடுகள் ₹10.50லட்சத்திற்கும், நாட்டு கோழிகள் ₹1.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் வரத்து குறைவாக இருந்த நிலையில் ₹8லட்சத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹46லட்சத்திற்கு  விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>