×

மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி

தர்மபுரி, பிப்.18: தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கை: மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை சார்பில், மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு, ஐஏஎஸ் போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக, பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர், விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மண்டல மீன்துறை துணை, இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நாளை (19ம் தேதி) பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், கூடுதல் விபரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், ராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, கலெக்டர் அலுவலகம் அஞ்சல், தர்மபுரி என்ற முகவரியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா