×

குண்டலப்பட்டி பிரிவு சாலையில் எஸ்பி ஆய்வு

தர்மபுரி, பிப்.18: தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டலப்பட்டி பிரிவு சந்திப்பு சாலையில், அடிக்கடி விபத்து நடக்கிறது. ஆண்டுதோறும் 5க்கும் மேற்பட்டவர்கள் பலியாகின்றனர். இந்த பகுதியை எஸ்பி பிரவேஸ்குமார், ஏடிஎஸ்பி குணசேகர், டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பொதுமக்கள் சாலையை எளிதாக நடந்து கடந்து செல்ல, சாலையின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதுகுறித்து டிஎஸ்பி அண்ணாதுரை கூறுகையில், ‘குண்டலப்பட்டி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலையில் விபத்துகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது பேரிகார்டு வைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் சாலையின் குறுக்கே நடந்து செல்ல, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். சோலார் உயர்மின் விளக்கு அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் கேட்டுள்ளோம். மேலும் சிவப்பு விலக்கு, ரிப்லக்டர் ஸ்டிக்கர் ஒட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்,’ என்றனர்.

Tags : SP ,inspection ,section road ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...