×

மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம் பாஜ மாநில தலைவர் பேச்சு

விருதுநகர்,பிப்.18:  தமிழகத்தில் மோடியை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை செய்வோம் என பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கூறினார். விருதுநகர் சூலக்கரையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிவாசன், மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். மாநில தலைவர் டாக்டர் முருகன் பேசுகையில், ``தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த உள்ளது. மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்திற்கு தேவையென இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சினிமா துறையினர், மாற்றுக்கட்சியினர் பாஜவில் சேர்ந்து வருகின்றனர்.தமிழகத்தில்மோடியை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை பாஜ செய்யும். கடந்த 6 ஆண்டுகளில் பாஜ ஆட்சியில் பயன்பெற்ற பயனாளிகள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர்’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பென்டகன் பாண்டுரெங்கன், ஜவஹர் ஆகியோர் தலைமையில் 6001 பேர் பாஜவில் இணைந்தனர். நிர்வாகிகள் பொன்ராஜ், வெற்றிவேல், காமாட்சி, ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : campaign ,speech ,BJP ,Modi ,state president ,
× RELATED பெண்களின் சக்திதான் எனக்கு...