×

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி: ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை: தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரு வாரங்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார். கால் தசைப்பிடிப்பு காரணமாக தோனி காயமடைந்துள்ளதால் விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி முதல் போட்டியில் வருகிற திங்கள்கிழமை ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் வீரர் எம்.எஸ்.தோனி, கால் தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்டு வருவதால், இந்தத் தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது 44 வயதாகும் தோனி, காயத்திலிருந்து மீள்வதற்கான தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தோனிகடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் காயத்தோடு போராடி வருகிறார்.

தோனி இல்லாத நிலையில், மார்ச் 30-ம் தேதி குவஹாத்தியில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே களம் காண உள்ளது. இது தவிர, அடுத்த இரண்டு வாரங்களில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் முக்கிய ஆட்டங்களையும் தோனி தவறவிட வாய்ப்புள்ளது.

278 போட்டிகளுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள தோனி இல்லாதது அணிக்கு ஒரு சவாலாகவே இருக்கும். இருப்பினும், விக்கெட் கீப்பிங் பொறுப்பைக் கவனிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ட்ரேடிங் முறையில் வந்த சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா மற்றும் உர்வில் படேல் என மூன்று மாற்று வீரர்கள் சிஎஸ்கே அணியில் தயாராக உள்ளனர்.

Tags : CSK ,CSK administration ,Dhoni ,IPL ,Chennai ,Rajasthan ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840...