கஞ்சா வியாபாரியை வெட்டிய 3 பேர் கைது ஒருவருக்கு வலை

விருதுநகர், பிப்.18: விருதுநகர் அருகே பெத்துரெட்டியபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(40). இவர் மீது கஞ்சா வழக்கு இருப்பதால் வழக்கிற்காக சிவகாசி நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது வடமாலபுரத்தை சேர்ந்த கருத்தப்பாண்டியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கருத்தப்பாண்டி அடிக்கடி போன் செய்து அழகர்சாமியிடம் கஞ்சா கேட்டு வந்துள்ளார். வழக்கு போட்டதால் கஞ்சா விற்பனை செய்துவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்தப்பாண்டியின் தந்தையிடம் மகனை கண்டித்து வைக்கும்படி தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அழகர்சாமி வீட்டு திண்ணையில் படுத்திருந்த போது கருத்தப்பாண்டி, சக்திவேல்(20), பாண்டி(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அழகர்சாமியை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பியோடிள்ளனர். சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அழகர்சாமி புகாரின் பேரில்,  வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பாண்டி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து, கருத்தப்பாண்டியை தேடிவருகின்றனர்.

Related Stories:

>