×

உத்தமபாளையத்தில் இன்று `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி தேனி வந்த மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

தேனி, பிப்.18 : `உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக’ தேனி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இரவு திமுகவினர் மேளதாளம் மற்றும் வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனி மாவட்டத்தில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இன்று (பிப்.18) காலையில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு மதுரையிலிருந்து தேனி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பங்களாமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேளதாளம் முழங்கியும், பட்டாசு வெடித்தும், வாண வேடிக்கை நடத்தியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எல்.மூக்கையா, பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமார், போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தேனி நகர திமுக பொறுப்பாளர் சூர்யாபாலமுருகன், தேனி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சக்கரவர்த்தி, தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரத்தினசபாபதி உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் உடன் வந்தனர்.


Tags : MK Stalin ,Theni ,Uththamapalaiyam ,constituency ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...