பாரம்பரிய சமையல் போட்டி

ஆர்.எஸ்.மங்கலம்/சாயல்குடி, பிப்.18:  ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில்  பணியாற்றும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு பாரம்பரிய சமையல் போட்டி நடைபெற்றது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூர்  அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல் போட்டி நடைபெற்றது. இதற்கு யூனியன்  தலைவர் ராதிகா தலைமை வகித்தார். பி.டி.ஓ ராஜா முன்னிலை வகித்தார்.  போட்டியில் சிறப்பான முறையில் சிக்கனமாகவும், நேர்த்தியாகவும் சமையல்  செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் அப்பகுதியில் பணி  செய்யும் ஏராளமான சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

 இதேபோல் கடலாடி யூனியன் சத்துணவு திட்டம் சார்பில்  பணியாளர்களுக்கு பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிக்கு சேர்மன் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஓ.க்கள் அன்புகண்ணன், பாண்டி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் எவாஞ்சிலின் ராணி வரவேற்றார். சத்துணவு திட்ட மேலாளர் ரவி நன்றி கூறினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி, யூனியன் மேலாளர் சிவணுபூவன், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சொக்கர், சத்துணவு திட்டம் உதவியாளர் துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>