×

13 தாசில்தார்கள் இடமாற்றம்

மதுரை, பிப்.18: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் அதிரடியாக நேற்றிரவு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார். இதில், மதுரை கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் திருமங்கலம் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும். கலால் மேற்பார்வை அலுவலர் சூரியகுமாரி கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும். திருமங்கலம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ் மதுரை ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், இங்கிருந்து தாசில்தார் கோபி மாவட்ட வழங்கல் அலுவலரின்  நேர்முக உதவியாளராகவும். தாசில்தார் சரவணன் மதுரை மேற்கு தாலுகா தாசில்தாராகவும். கூடுதல் வரவேற்புரை தாசில்தார் இதய கமலம் விமான நிலைய நில எடுப்பு தாசில்தாராகவும்,  இங்கு பணியாற்றிய நாகபூஷணம் வடக்கு வட்டம் குடிமை பொருள் தாசில்தாராகவும்.  அங்கு பணியாற்றிய இளமுருகன் மதுரை தெற்கு கோட்ட கலால் அலுவலகம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அகதிகள் முகாம் தாசில்தார் தமிழ்ச்செல்வி வாடிப்பட்டி நில எடுப்பு தாசில்தாராகவும். மதுரை கிழக்கு தாலுகா தாசில்தார் லயனல் ராஜ்குமார் வாடிப்பட்டி தாலுகா தாசில்தாராகவும், அங்குள்ள பழனிக்குமார் மதுரை கிழக்கு தாலுகா தாசில்தாராகவும்.  வரவேற்பு துணை தாசில்தார் பத்மா திருமங்கலம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர். ‘மேலும் மாவட்டத்தில் துணை தாசில்தார் லோகேஸ்வரி மதுரை தெற்கு தாலுகா துணை தாசில்தாராகவும். இங்கு உள்ள ஷர்மிளா வாடிப்பட்டி துணை தாசில்தாராகவும். அங்குள்ள வனிதா வரவேற்பு பிரிவு துணை தாசில்தாராகவும். உதவி ஆணையர் நகர்ப்புற நிலவரி அலுவலக துணை தாசில்தார் சுந்தரவேல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கும். ஹில்டா எட்வின் ரூபினா உதவி கலால் துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளனர்.

Tags : Tasildars ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்கள் மாற்றம் கலெக்டர் உத்தரவு