×

சின்னக்கட்டளை ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 26 வீரர்கள் காயம்

பேரையூர், பிப்.18: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம் சின்னக்கட்டளை புனுகு கருப்புசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆர்டிஓ ராஜ்குமார் தலைமையில், ஏடிஎஸ்பி வனிதா, பேரையூர் டிஎஸ்பி மதியழகன், தாசில்தார் சாந்தி, ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்த ஜல்லிக்கட்டிற்கான கால அவகாசம் மாலை 3.30 மணிக்கு முடிந்ததால் 406 காளைகள் மட்டுமே வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் மாடு பிடிவீரர்கள் 26 பேர் காயமடைந்தனர். மதுரை கல்லனை நெடுங்குளம் பாண்டி ஜல்லிக்கட்டுகாளை பரமன்பட்டி அருகே கிணற்றில் விழுந்து லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது. வாலாந்தூர் காவல்துறையில் பணிபுரியும் சுரேந்திரன் காளையை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் பிடிக்க முடியவில்லை. தன்னை தொட்ட வீரர்களை கீழே தள்ளி மிரட்டியது. உரிமையாளரான சுரேந்திரன் காளையை வணங்கினார். காளை கோபத்தை குறைத்து அப்படியே நின்று விட்டது. இதில் காளைபிடி வீரர்களாக மதுரை ஏர்போர்ட் வலையங்குளத்தை சேர்ந்த முருகன் முதல் பரிசு பெற்றார். தேனி அல்லிநகரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவின் காளை முதல் பரிசு பெற்றது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ