தலையாரியிடம் தகராறு செய்தவர் கைது

உசிலம்பட்டி: எழுமலையில் தலையாரியாக பணியாற்றி வருபவர் பாலு. இவர் நேற்று அலுவலகத்தில் இருந்தபோது எழுமலையை சேர்ந்த மூர்த்தி மகன் அழகுராஜா(35), தலையாரி பாலுவிடம் தகராறு செய்துள்ளார். இதில் தலையாரி பாலுவை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, எழுமலை வருவாய் ஆய்வாளர் ஜான்சி கொடுத்த புகாரின்பேரில், எழுமலை போலீசார் அழகுராஜாவை கைது செய்தனர்.

Related Stories:

>