தேவையானவை:
கறுப்பு எள்ளு – 2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு – 3 பற்கள்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
எள்ளை சுத்தம்செய்து, வாணலியிலிட்டு, வாசனை வரும்வரை வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பைப் சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதனுடன் மிளகாய் வற்றல், பூண்டு, புளி ஆகியவற்றைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து மேலும் ஓரிரு விநாடிகள் வதக்கிய பின் ஆறவைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
பயன்கள்:
இந்த துவையலை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக பிரியும். சிறுநீர் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். வெள்ளை எள்ளை விட, கறுப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி ஆகியவை நிறைந்துள்ளதால், இளநரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும். இதை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும்.
