ஜல்லிக்கட்டு இடம் ஆய்வு

சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டியில் வரும் 26ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட  ஏற்பாடுகள் குறித்து நேற்று கோட்டாட்சியர் முருகானந்தம், தாசில்தார் பழனிக்குமார் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விழா கமிட்டியினர், ஊராட்சி தலைவர் பவுன் முருகன், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம், செயலர் திருச்செந்தில் மற்றும் கால்நடை துறையினர், சுகாதாரத்துறையினர்,காவல் துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இவ்விழாவில், பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு பின்னரே மாடுபிடி வீரர்கள்,காளைகளுடன் வரும் நபர்கள் அனுமதிக்கப்படுவர்.

Related Stories: