×

தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரி திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல், பிப். 18: திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இலவசமாக தொகுப்பு வீடுகள், காலனி வீடுகள் கட்டி தரப்பட்டது. தற்போது அந்த வீடுகள் அனைத்தும் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமை வகிக்க, ஒன்றிய கவுன்சிலர் அஜாய்கோஷ், அடியனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், 2வது வார்டு கவுன்சிலர் செல்வநாயகம், 13வது வார்டு கவுன்சிலர் ஜீவா நந்தினி, மாவட்ட குழு கருப்புசாமி முன்னிலை வகிக்க, பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழக அரசு நிதி ஒதுக்க கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜாவிடம் வழங்கினார்.
 மனுவை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Siege ,union office ,Dindigul ,package houses ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்