×

கொடைக்கானல் விடுதியில் 4 மாணவிகள் திடீர் வெளியேற்றம் எதிர்காலம் பாதிக்கும் அபாயம்

கொடைக்கானல், பிப். 18: கொடைக்கானல் இந்திரா நகரில் உள்ளது ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதி. இங்கு 11 மாணவிகள் தங்கி 10, 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளும், மூஞ்சிக்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 மாணவிகளும் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் 4 மாணவிகளை திடீரென வெளியேற்ற விடுதி வார்டன் தமிழரசி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சமையலர், வார்டன் சொன்னதாக கூறி அந்த 4 மாணவிகளையும் வெளியேற்றி உள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பள்ளி தலைமையாசிரியர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவர் இதுகுறித்து தாசில்தார் சுப்பிரமணிக்கு தெரிவிக்க அவர், ‘மாணவிகள் இதுவரை தங்க விண்ணப்பமே செய்யவில்லை, அவர்களை முறைப்படி தங்கும் விடுதியில் சேர்ப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுதான் முடிவு செய்ய வேண்டும், அதற்கு குறைந்தது 2 மாதங்கள் ஆகும்’ என கூறி விட்டார்.  இதனால் மாணவிகள் செய்வதறியாமல்  தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், எங்களை உடனடியாக இந்த விடுதியில் சேர்த்தால்தான் நாங்கள் தொடர்ந்து படித்து பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுத முடியும். இல்லாவிடில் எங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்’ என்றார்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்