×

சின்னாளபட்டி விடுதியில் சீரமைப்பு பணியால் திறந்தவெளியில் தங்கி படிக்கும் மாணவர்கள்

சின்னாளபட்டி, பிப். 18: சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அருகே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வந்தார். தற்போது இந்த விடுதியில் சீரமைக்கும் பணி நடக்கிறது. 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்ததால் மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். விடுதி அறைகள், குளியலறை, கழிப்பறை என அனைத்து இடங்களில் பராமரிப்பு வேலை நடப்பதால் மாணவர்கள் திறந்தவெளியில் உடைமைகள், பாட புத்தகங்களை வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கின் போது சீரமைக்காமல் பள்ளிகளை திறந்த பின் பணிகளை செய்கின்றனர். இதனால் மாணவர்கள் விடுதி வெளியே கடும் பனிப்பொழிவில் நடுங்கியபடியே தங்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். எனவே விடுதியில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து மாணவர்கள் பாதுகாப்பாக தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

19 பவுன் கொள்ளைவேடசந்தூர் அருகே சத்திரபட்டியை சேர்ந்தவர் சேகர். இவர் அகரம் பேரூர் ஆதிதிராவிட துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள். இந்நிலையில் நேற்று சேகர் தனது உறவினர்களை பார்க்க திண்டுக்கல் சென்று விட்டார். லிங்கம்மாள் விட்டல்நாயக்கன்பட்டி தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சேகர் வீட்டிற்கு திரும்பிய போதுதான் இசம்பவம் பற்றி தெரிந்தது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chinnalapatti hostel ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...