ஏரியில் குழந்தை சடலம் மீட்பு.

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஏரியில் குழந்தை சடலம் மிதப்பதாக சேலையூர் போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. போலீசார் சென்று ஏரியில் பார்த்தபோது தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை சடலம் மிதந்து கொண்டிருந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக, ஏரி அருகே கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிந்து(23) என்பவரை பிடித்து விசாரித்ததில் இறந்த ஆண் குழந்தை சிந்துவின் தங்கை செல்விக்கு பிறந்தது என  தெரியவந்தது. இதனையடுத்து, செல்வி மற்றும் அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை பிடிக்க  போலீசார் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். 

Related Stories: