×

இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்த வாலிபர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த முகமது அசேன்(29) என்பவருக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பிறகு நிறுத்தப்பட்டது. திருமணம் நின்றுவிட்டதால் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், முகமது அசேன் ஏற்கனவே அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசியபோது சில ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார். திருமணம் நின்றுவிட்டதால் சமீபத்தில் அந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த இளம்பெண் இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் முகமது அசேனை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர். அதில் அவர் வீடியோக்களை பரிமாறியது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை புளியந்தோப்பு அனைத்து காவல் நிலையத்திற்கு மாற்றினர். பின்னர் போலீசார் முகமது அசேன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : teenager ,friends ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...