திண்டுக்கல் மார்ச் 27: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனையொட்டி வேட்பாளர்கள் மார்ச் 30ம் தேதி முதல் ஏப்.6ம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மேலும், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 31ம் தேதி, ஏப்.1, 3, 5ம் தேதி ஆகிய விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்.6ம் தேதி கடைசி நாளாகும் என தெரிவித்துள்ளார்.
