×

முசிறி மங்களம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் பங்கேற்பு

முசிறி, பிப். 17: முசிறி அருகே மங்களம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பங்கேற்று மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் சிறப்புரையாற்றி கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் பரிசு பெட்டகங்களை வழங்கினார். எம்ஐடி கல்வி குழுமங்களின் துணைத்தலைவர் பிரவீன், மங்களத்தில் திறக்கப்பட்ட மினி கிளினிக் பயன்பாட்டுக்கு குளிர்சாதன பெட்டியை வழங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஒன்றிய செயலாளர் ஆமூர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மினி கிளினிக் காலை 8 முதல் 12 வரை, மாலை 4 முதல் 7 வரை இயங்கும். மினி கிளினிக்குக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர், 2 உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

Tags : State Chief ,opening ceremony ,Co-operative Bank ,village ,Musiri Mangalam ,clinic ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...