×

சாலை விரிவாக்கத்துக்காக வீடுகள் அகற்றம் பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை

திருச்சி, பிப். 17: சாலை விரிவாக்கத்துக்காக வீடுகள் அகற்றப்படுவதால் மாற்று இடம் வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அம்பேத்கர் நகர் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பில் ரன்வே மற்றும் ரூ.300 கோடி மதிப்பிடில் புதிய டெர்மினல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் விமான நிலையம் செல்லும் சாலைகள் அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக டிவிஎஸ் டோல்கேட் முதல் விமான நிலையம் வரையிலான சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.

இதில் விமான நிலையம் அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின்வாரிய இணைப்பு உள்ளிட்ட அடிப்படை ஆதாரங்களுடன் குடியிருந்து வருகின்றனர். தற்போது சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைதொடர்ந்து அங்கு குடியிருந்து வரும் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. பொன்மலை கோட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் கலெக்டரை சந்தித்து 5 பேர் மனு அளித்தனர்.

Tags : Removal ,houses ,road ,
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு