×

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தர்மபுரி, மார்ச் 27: தர்மபுரி பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சங்கர் தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 230 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் கண்ணுச்சாமி வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க செயலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags : Government College ,Dharmapuri ,ceremony ,Government ,Arts ,Science ,College ,Pennagaram, ,Principal of the college ,Shankar ,Principal ,Krishnagiri Government Arts College for Men ,Anuradha ,
× RELATED கஞ்சா பறிமுதல்