×

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

தர்மபுரி, மார்ச் 27: நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனுவை போட்டனர். அதில், கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட நார்த்தம்பட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதியதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழாயில் இதுவரை குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags : Dharmapuri ,Northampatti ,Nallampalli taluka ,Dharmapuri district ,
× RELATED கஞ்சா பறிமுதல்