×

‘குறள்நெறி செம்மல்’ விருது

நெல்லை, மார்ச் 27: உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் கோவிந்தன், பொருளாளர் சவுந்திர்ராஜன், அமைப்பு செயலாளர் காசிநாதன், தலைமை கரண ஆசான் கருத்தப்பாண்டி, தலைமை நிலைய செயலாளர் சிவஞானபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சம்பத் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஆதிலிங்கம் தொடக்க உரையாற்றினார்.

இதில் மகளிர் மட்டும் பங்கேற்ற விழிப்புணர்வு பட்டிமன்றம், கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் நலன் காப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டிக்கு ‘குறள் நெறி செம்மல்’ விருதும், மாநில மகளிரணி அமைப்பாளர் பிச்சி ஆதிலிங்கம், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் வனிதா உள்பட 20 பெண்களுக்கு “மங்கையற்கரசி” விருதும், அமைப்பு செயலாளர் காசிநாதன், மாநில துணை தலைவர் ஜனார்த்தனன், சிறப்பு தலைவர் சின்ராசு உள்பட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகளின் பொய்க்கால் குதிரை ஆட்டம், சிறுவர்களின் திருவள்ளுவர் வேட மாறுவேட போட்டிகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சம்பத் செய்திருந்தார்.

Tags : Nella ,World Women's Day Celebration ,Tiruvannamalai ,World Triakura Federation ,Gnanamoorthy ,President ,Special ,Govindhan ,Treasurer ,Soundarrajan ,Kasinathan ,Karana Asan Konudhapandi ,
× RELATED கஞ்சா பறிமுதல்