×

விழுப்புரம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 11 ஆண்டு சிறை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், மார்ச் 27: விழுப்புரம் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. விழுப்புரம் அருகே மேல்பாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வீரமணி(24). இவர் 18 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 2023 மார்ச் மாதம் காதலித்து வந்துள்ளார். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வீரமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் வீரமணிக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்ட வீரமணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுவையில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்பவன், காலாப்பட்டு உள்ளிட்ட 5 தொகுதிகளில் காங்., போட்டி தேமுதிக, மதிமுக மனுக்கள் வாபஸ் திமுக அமைப்பாளருக்கு எதிராக மாஜி காங்., தலைவர் மகன் போட்டி
திருபுவனை தொகுதியில் திமுக சார்பில் அங்காளன் எம்எல்ஏவுக்கு எதிராக காங்., வேட்பாளர் வேலு போட்டியிடுகிறார். இதேபோல், காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக அமைப்பாளர் நாஜிம் எம்எல்ஏ போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல், அவரை எதிர்த்து முன்னாள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் மகன் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Villupuram ,Villupuram… ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...