விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் மிரட்டுவது போல் பேசுவதை கண்டித்து வெளிநடப்பு

தஞ்சை, பிப்.17: விசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் மிரட்டுவது போல் பேசுவதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் பேசும்போது, மாநில அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றார். திமுக தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், மத்திய காலக்கடன்களுக்கு தள்ளுபடி இல்லை என தற்போது அறிவித்துள்ளது விவசாயிகளை ஏமாற்றும் செயல். ஏனென்றால் குறுகிய கால கடன்களை வறட்சி, கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக மத்திய கால கடனாக மாற்றியதே தமிழக அரசு தான். பிறகு தள்ளுபடி இல்லை என்றால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. எனவே அனைத்து வித கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர் ரவிச்சந்தர் பேசும்போது, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர் கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் . அதுபோல் நானோ, தவறான தகவல் தெரிவிக்கும் கூட்டுறவு அதிகாரி மன்னிப்பு கேட்கும்வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கூட்டுறவு அலுவலர் ராமச்சந்திரன் பதிலளிக்கும்போது, அவ்வாறு அது தவறான தகவல் என்றால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார். இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் பேசும்போது, விவசாயிகளை அதிகாரிகள் மிரட்டுவது போல் பேசுவது கண்டித்தக்கது. இதை ஏற்று கொள்ள முடியாது என்றார். இதையடுத்து அனைத்து விவசாயிகளும் கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடியில் நிகழும் குளறுபடி, மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories:

>