×

மத்திய, மாநில அரசை கண்டித்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.17: மோட்டார் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து, ஆட்டோ, மோட்டார் தொழிலாளர்கள் சங்கத்தின், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களின் சார்பில், தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) முன், நடைபெற்ற மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு, சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் கோரிக்கை விளக்க உரையாற்றினார். சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் முருகன், அய்யப்பன், குருமூர்த்தி, மணி, ஜெய்சங்கர், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், சங்கர், ஜோதி, கார்த்திகேயன், வெண்மணி, ஜோசப், ஜார்ஜ் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பேர் நீதி ஆழ்வார், அன்பு, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்கத் தடை விதிக்கக்கூடாது. மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டே பறிக்கக்கூடாது. ஸ்டிக்கர், ஸ்பீடு கவர்னர் என்ற பெயரால் பகல் கொள்ளை அடிக்கக் கூடாது.
காவல்துறையினர் ஓட்டுநர்கள் மீது பொய் புகார் புனைவதைக் கைவிடவேண்டும். வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அநியாய பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். முறைசாரா நல வாரியத்தை முறைப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags : Demonstration ,motor workers ,unions ,state government ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...