×

பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, பிப்.17: பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை ரயில்வே நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.  தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதிராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில்கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி 2 சட்டமன்ற தொகுதிகளையும் வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Tags : DMK ,constituencies ,Pattukottai ,Peravurani ,
× RELATED உதய சூரியன் சின்னத்திற்கு பொள்ளாச்சி...