புதுக்கோட்டை மாவட்டத்தில் சமத்துவபுரம் வீடுகளை மராமத்து செய்ய வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.17:புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து சமத்துவபுரம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சரி செய்து தர வேண்டும் என்று நேற்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரம் வீடுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி முற்போக்கான சமத்துவபுர திட்டத்தை செயல்படுத்தி பணிகள் முடிக்கப்பட்டு வீடு இல்லாத ஏழை எளிய குடும்பங்களுக்கு சாதி பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் இந்த சமத்துவ புரத்திற்கு பெரியார் சமத்துவபுரம் என்று பெயரிடப்பட்டது.

மேலும் சமத்துவ புரத்தில் தனியாக ரேஷன் கடைகள், குடிநீர் வசதி, கலையரங்கம், சமுதாய கூடம் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. இதனால் இந்த பகுதியில் அதிகமான ஏழை எளிய மக்கள் குடியேற தொடங்கினர். இந்த குடியிருப்புகள் கட்டி பல ஆண்டுகள் ஆனதால்போதிய பராமரிப்பு இன்றி தற்போது சேதமடைய துவங்கியுள்ளது. இதனால் இந்த குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து சமத்துவ புரம் குடியிருப்புகளை மராமத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து சமத்துவபுரம் பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வருகிறோம். சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. சில வீடுகள் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதனால் இரவில் வீட்டிற்குள் குழந்தைகளுடன் தூங்குவதற்கு அச்சமாக உள்ளது. நாங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகுந்த சிரமமாக உள்ள நிலையில் புதிய வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளோம். இதனால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு புதிய வீடு அல்லது சமத்துவபுரம் வீடுகளை மராமத்து செய்யது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>