×

எம்பி திருநாவுக்கரசர் உறுதி ஏற்று போராட்டம் வாபஸ் புதுக்கோட்டை நகர் பகுதியில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

புதுக்கோட்டை, பிப்.17: புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் அவ்வப்போது நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம், கீழராஜ வீதி, மேல ராஜவீதி, பிருந்தாவனம் , ஆலங்குடி சாலை, சந்தபேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் அதிக வணிகம் நடக்கும் வியாபாரம் நடைபெறும் இடம் என்பதால் நகரின் மற்ற பகுதிகளை விட எப்போதும் மக்கள் நடமாட்டம் சற்று அதிக அளவில் இருக்கும். இந்த பகுதிக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் முறையாக பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தாதமல் .

சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் ஒரே நேரத்தில் இரு புரத்திலும் பேருந்துகள் வரும்போது அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகி–்ன்றனர். குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்னர். குறிப்பாக மேல ராஜவீதி, கீழ ராஜ வீதி, சாந்த நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் உள்ள வணிக நிறுவணங்களுக்கு வருபவர்கள் தங்கள் கொண்டு வரும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தாமல் அவர்கள் செல்லும் கடைகளுக்கு முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஒரு வாகனம் நிறுத்தினால் பிரச்னையில்லை. கடைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடைக்கு முன்னால் நிறுத்த முயற்சி செய்யும்போது அங்கு போதிய இடமில்லாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இவ்வாறு இரு புரத்திலும் நிறுத்தும்போது நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு சாலை மறிக்கப்படுகின்றது. இதனால் இரு வழிசாலையாக இந்த சாலைகள் தற்போது ஒரு வழி சாலைபோல் மாறிவிடுகின்றது. இதனால் ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்தால் சாலையில் போதிய வழியின்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துண்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு சில கடைகளில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. மேலும் கனரக வாகனங்கள் வரும்போது சுமார் ஒரு மணி நேரம் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகர் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மாலை நேரங்களில் குடிமகன்களின் முறையற்ற வாகன நிறுத்தத்தால் அந்த பகுதியில் தினசரி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தானே தவிர மற்றவர்கள் இல்லை. இதனால் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
சில வீடுகள் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதனால் இரவில் வீட்டிற்குள்  குழந்தைகளுடன் தூங்குவதற்கு அச்சமாக உள்ளது. நாங்கள் அன்றாட வாழ்க்கையை  நடத்துவதற்கு மிகுந்த சிரமமாக உள்ள நிலையில் புதிய வீடு கட்ட முடியாத  நிலையில் உள்ளோம்.

Tags : Thirunavukarasar ,protest ,Pudukottai Nagar ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...