அரிமளம் அருகே விபத்து மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

திருமயம்.பிப்.17: அரிமளம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு அருகே உள்ள நங்கபட்டியை சேர்ந்தவர் சின்னராசு(19). இவர் தனது உறவினர்கள் அண்ணாமலை(21), மலையப்பன் (40) ஆகியோருடன் அரசர்குளத்திற்கு பைக்கில் சென்று விட்டு அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை சின்னராசு ஓட்டினார். இந்நிலையில் கே. புதுப்பட்டி ஆஸ்பத்திரி அருகே வந்த போது பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பின்னால் இருந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>