×

நெடுஞ்சாலை பகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகிறதா?

அரியலூர்,பிப்.17: செந்துறை நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகிறதா? என்று விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது குழுமூர் கிராமத்தில் மரகன்று நட்டு வைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது. அதன்படி செந்துறை-அங்கனூர் வழியாக அகரம்சீகூர் வரையிலான சாலையில் செந்துறை நெடுஞ்சாலைதுறை சார்பில், மரக்கன்று நடுதல், சாலையோர கரைகளை பலப்படுத்துதல், பாலம் மற்றும் எச்சரிக்கை பாகங்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு குழுமூர் ஏரிக்கரையில் மரகன்று நட்டு வைத்தார், தொடர்ந்து செந்துறை - அங்கனூர் வரை 15 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் ஆலங்கன்று, அரசு, புங்கன், நாவல், புளி போன்ற மரங்களை நடவு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு நன்றாக பாராமரிப்பதாகவும் மீதமுள்ள இடங்களில் விரைவாக மரக்கன்றுகளை விரைவாக நட்டு பாதுகாப்பு ஏற்படுத்துங்கள் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அரியலூர் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன், செந்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்தம்பி, உதவி பொறியாளர் முரளிதரன், ஆய்வாளர் சிவகுமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு ஏரிக்கரை ஓரமாக நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, கூண்டு அமைத்து பராமரித்து வருகிறனர். இதனை சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags : highway area ,
× RELATED மேம்பாலம் பகுதியில் பிரிவு சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தல்