×

அதிகாரி ஆய்வு மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமை பணி தேர்வுக்கான பயிற்சி முகாம்

அரியலூர்,பிப்.17: அரியலூர் மாவட்ட மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமை பணி தேர்வுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. இதற்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சட்டப்பேரவையில் அறிவித்தபடி மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான றறற.கiளாநசநைள.வn.பழஎ.in?லிருந்து ஈhவவி:ஃஃறறற.கiளாநசநைள.வn.பழஎ.in?லிருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து. உரிய ஆவணங்களுடன் அரியலூர் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண் 234. 2வது மேல்தளம். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம். அரியலூர்-621704 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 19ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அரியலூர் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரத்னா, தெரிவித்துள்ளார்கள்.

Tags : Official Training Training Camp ,Indian Civil Service Examination for Fishermen Community Graduate Youth ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது