×

காரைக்காலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி

காரைக்கால்,பிப். 17: காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை 10 மணிக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. பேரணியை காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மா துவக்கி வைத்தார். இதில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிகாரிகாபட் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் , காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம்,மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பொருட்களையோ அதிக நபர்களையோ ஏற்றக்கூடாது.

என்றும் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது ஸ்கூல்பேக் மற்றும் கை, கால்களை வெளியே நீட்டியிருக்கும் படி ஓட்டி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.  இதில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு முத்திரை பொறித்த யூனிபார்ம் அளிக்கப்பட்டது. பேரணி பாரதி வீதி, பக்கிரிசாமி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. மேலும் ஆட்டோக்களுக்கு கட்டாயமாக மீட்டர் பொருத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...